Home இலங்கைகொடிகாமத்தில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்

கொடிகாமத்தில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்

by admin

யாழ்.கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் வீதி விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. எனவும் அது திட்டமிட்ட கொலை என இளைஞனின் குடும்பத்தார் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

கடந்த 14ம் திகதி இரவு கொடிகாமம் – கோயிலாமனை பகுதியை சேர்ந்த இ.நவர்ணன் (வயது24) என்ற இளைஞன் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

இந்நிலையில் இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய பெற்றோார் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர்.

குறித்த விடயம் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிவான் நீதிமன்ற நீதிவான் யாழ்ப்பாணத்தில் உள்ள மரண விசாரணை அதிகாரி ஊடாக மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More