யாழ்.காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு அருகில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் பின்னர் உயிரிழந்து்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம். என்னும் கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதுடன், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.
குறித்த சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.காவல்நிலையம் முன்பாக , யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதன்மை வீதியின் ஓரமாக ஒருவர் வீழ்ந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்த போது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். நேற்று நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் தடயவியல் காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கான தடையங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
1 comment
கே.கே.எஸ் காவல்நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கும்பலால் அடித்துக்கொலை?
மன்னிக்கவும். இந்தச் செய்தியானது, சடலமாக மீட்கப்பட்டவர் அதன் பின்னர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் எனப் பொருள் படுகிறது. தயவு செய்து தமிழைச் சரியாக எழுதுங்கள். நன்றி