Home இலங்கைதனியார் வைத்தியசாலைக் கழிவறையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு அமைச்சாின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது

தனியார் வைத்தியசாலைக் கழிவறையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு அமைச்சாின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது

by admin

நாரஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதலாம் மாடியில் கழிவறையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு அமைச்சா் ஒருவாின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே அவை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்தவரினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திருத்தப் பணிகளுக்காக சென்றுள்ள க குறித்த சந்தேகநபர் அங்குள்ள அறையொன்றின் ​மேசையின் இலாச்சியில் இருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை மீட்டுள்ளதாகவும் கைக்குண்டை இந்த சந்தேகநபர் வைத்துக்கொண்டதுடன், தோட்டாக்களை அவருடன் இருந்த மற்றுமொருவர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.

கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட அந்த வீட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார் என்ற போதிலும் , அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகைதருவதற்கு முன்னரே, கைக்குண்டு மற்றும் ​தோட்டக்களை தான் எடுத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடா்புடைய மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தொிவித்துள்ளனா்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், அவர் மஹவ, குருநாகல் பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More