மதுபானச் சாலைகளை திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் தலையீடின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் நேற்று (18.09.21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.
மதுபானசாலைகளை திறக்க அரசாங்கமே அனுமதித்தது!
அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே நாடுபூராகவும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாதென்றும் அரசாங்கத்திடமிருந்து ஏதோவொரு வகையில் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடுபூராகவுமுள்ள உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறக்கப்பட்டன எனக் குறிப்பிட்டார்.
கிராமங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை பலர் பருகுவதுடன், அது ஆராக்கியம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.