Home பிரதான செய்திகள்சென்னை மும்மையை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில்

சென்னை மும்மையை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில்

by admin

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு ஆரம்பமாகியுள்ள நிலையில் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும்போட்டியிட்டன.

இதன்போது நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பாடத் தீா்மானித்து நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது

இதனையடுத்து 157 ரஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓட்டஙகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மேலும் இன்று நடைபெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ரோயல் சலஞ்ச் அணியும் போட்டியிவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More