உலகின் வயதான இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த உமேனோ மற்றும் கொடாமா ஆகிய சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். அவர்களது வயது 107 ஆண்டுகளும் 300 நாள்களுமாகும். ஜப்பானில் முதியவர்கள் நாள் கொண்டாடப்பட்ட தினத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு சகோதரிகளும் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்ற நிலையில் . அவர்களுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்த நிலையில் அவா்களது சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது