Home இலங்கைஅராலியில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின்னரே சாரதி காயங்களுடன் மீட்பு

அராலியில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின்னரே சாரதி காயங்களுடன் மீட்பு

by admin

யாழ்.  அராலி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்  சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டு  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையிலும் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேரூந்தில் செல்லும்போது பேருந்தானது வேக கட்டுப்பாட்டை இழந்து அரச மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் அறுவர் பயணித்த நிலையில் சாரதி  படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த மூவரும் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் சாரதியின் இருக்கை பக்கம் விபத்து நடைபெற்றதால் , சாரதியை நீண்ட போராட்டத்தின் பின்னரே மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More