161
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது ஒரு மாத குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்நிலையில் வீட்டிலிருந்த அவரது குழந்தை உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.
Spread the love