Home இலங்கைமன்னாரில் இராணுவத்தினா் வீதிச் சோதனை முன்னெடுப்பு

மன்னாரில் இராணுவத்தினா் வீதிச் சோதனை முன்னெடுப்பு

by admin

மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று புதன் கிழமை (29) மாலை முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி ஆகிய பகுதிகளில் நிற்கின்ற இராணுவத்தினர் மக்களை சோதனை செய்து வருகின்றனர்.

இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் குறித்த பகுதிகளில் இராணுவத்தின் சோதனை இடம்பெற்று வருகின்றது.  குறிப்பாக குறித்த வீதிகள் ஊடாக மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் உடமைகளை சோதனை செய்யப்படுவதோடு,வாகனங்களும்  சோதனை செய்யப்படுகிறது.


திடீர் என குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதால் அவ் வீதியூடாக செல்லும் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More