Home இலங்கைவளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணம் அச்சுவளி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

அவருக்கு கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்.

நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை அவரை கடித்த வளர்ப்பு நாள் கடித்த மறுநாளே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More