கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் 44 வருட காலம் சேவையாற்றி நேற்றைய தினத்துடன் பேராசிரியர் சாந்தி செகராஜசிங்கம் ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். சட்ட பீடத்தில் பல பதவிகளை வகித்து வந்த அம்மையார் வணிகச்சட்டத்துறையினதும் சட்டத் தமிழ் வளர்ச்சிக்காகவும் தனது அதீத பங்களிப்பையும் காத்திரமான தடத்தையும் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக சட்டபீடத்தின் சட்ட முதுமானி கற்கையை (LLM) ஒருங்கிணைத்து, நாட்டின் சிறந்த பட்டக்கற்கையாக தரமுயர்த்துவதற்கும் வழிவகுத்தவர்.
சட்டபீடத்திற்கு நுழையும் மாணவர்களை (LLB) சட்டக்கல்வியின் துணையோடு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரிமும் மன உறுதியும் உடையவர்களாக மாற்றியதில் அம்மையாருக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.