மட்டக்குளி இராணுவ முகாம் கட்டளை அதிகாரியான லெப்டினன் கேர்னல் சமந்த திலக்கரத்ன உள்ளிட்ட சந்கேநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தொட்டலங்க – எல்ல விளையாட்டு கழக தலைவராக செயற்பட்ட 36 வயதான அகில சம்பத் ரத்னசிறி எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பில் தொடர்ந்த வழக்கு தொடா்பிலேயே இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களில் ஒரு பெண்ணை தவிர்ந்த ஏனைய அனைவரும் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளாக செயற்படுபவர்கள் என்பதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க உத்தரவிடக் கோரி, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்
மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் சந்தேகநபர்கள், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும் மாறாக நன்றாக திட்டமிட்டு, பொதுமகனொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதால், வரப்பிரசாதங்களை வழங்குமாறு தன்னால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாதென மேலதிக நீதவான் தொிவித்துள்ளாா்