Home இலங்கைபருத்தித்துறை மாவட்ட நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது

பருத்தித்துறை மாவட்ட நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது

by admin

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 4.20 மணியளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காரில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முதன்மை வீதியில் பயணித்துள்ளார். அவ்வேளை முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த வீதித் தடையில் கடமையில் இருந்த  காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.

மூவரும் நெல்லியடி காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More