Home பிரதான செய்திகள்ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை

by admin

நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 51ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி களத்தடுப்பினை தொிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 91 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 8.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 94 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை இன்று நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் போட்டியிவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More