யாழில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் பணத்துடனும், 50 கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி துண்ணாலை பகுதியில், வீடொன்றில் போதை பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக நெல்லியடி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து , குறித்த வீட்டினை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.
அதன் போது, வீட்டிலிருந்தவாறே போதை பொருள் வியாபரத்தில் ஈடுபட்டார் என, வீட்டிலிருந்த 30 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணிடம் இருந்து , ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50 கிராம் ஹெரோயின் போதை பொருளை கைப்பற்றியதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நெல்லியடி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.