Home இலங்கைஅராலியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இராணுவ சிப்பாய்கள் – இராணுவ தரப்பினர் விசாரணை!

அராலியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இராணுவ சிப்பாய்கள் – இராணுவ தரப்பினர் விசாரணை!

by admin

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 
அராலி தெற்கு பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற குறித்த சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


குறித்த பகுதியில் கார் ஒன்றில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை வழிமறித்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது , தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.  அத்துடன் தாம் இயக்கச்சி இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என்றும் , தற்போது விடுமுறையில் இப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்னர். 


அதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் , வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கி இருவரையும்காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இருவரையும் வட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் இருவரும் இராணுவத்தில் தற்போதும் கடமையாற்றுபவர்கள் என்பதனை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர்  அவர்களை காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர். 


அதேவேளை , விடுமுறையில் சென்றவர்கள் எதற்காக அராலி பகுதிக்கு காரில் சென்றனர் என்பது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More