இலங்கையின் முதற்பிரஜை மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
72ஆவது இராணுவ கொண்டாட்டத்தை முன்னிட்டு அநுராதபுரம் சாலியபுரவிலுள்ள கஜபா கட்டளைத் தலைமையகத்தில் கோட்டாபய ராஜபக்ஸ கிரிக்கெட் மைதானத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இன்று (10) திறந்து வைத்தார்.
ஜனாதிபதியால் திறக்கப்பட்ட நினைவுப் படிகத்தில் சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்ததுடன், அதில் தமிழ் இடம்பெறாததையடுத்தே மேற்கண்ட பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் மனோ கணேசன் எம்.பி பதிவிட்டுள்ளார்.
”விளையாட்டரங்கமாக இருக்கலாம்! விளையாட்டாகவே இருக்கலாம்! அன்னை இலங்கையின் பேரில், முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும்.
அடுத்த மூன்று வருடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ செய்யப்போகும் “பிழைதிருத்தங்களில்” மொழிகொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாய் இருக்க பிரார்த்திக்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.