நோர்வே நாட்டின் அமைதியான நகர் ஒன்றில் நடந்த மிக மோசமான தாக்குதல் சம்பவத்தில் ஐந்து பேர் அம்பு எய்து கொல்லப்பட்டிருக்கின்றனர். இருவர்காயமடைந்துள்ளனர். அம்பு – வில்லுடன்தோன்றித் தாக்குதல் நடத்திய நபர் 37வயதான டெனிஷ் பிரஜை என்று தகவல்வெளியாகி உள்ளது.
நோர்வேயின் தென் கிழக்கே Kongsberg என்னும் நகரில் நேற்ற் மாலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவர் தனியாள் என்றும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைதின் போது காயமடைந்த அவர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ஒரு பயங்கரவாத நோக்கம் கொண்ட தாக்குதல் என்றே காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறை கொமாண்டோக்கள் Kongsberg நகரில் தாக்குதல் நடந்த பிரதேசத்தைஉடனடியாக மூடி முடக்கினர். மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்கப்பட்டனர்.நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளசுப்பர் மார்க்கெட் (Coop Extra supermarket)ஒன்றிலேயே முதலில் பலர் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கூறப்படுகிறது
தாக்குதலாளி பின்னர் நகரின் வேறு பல பகுதிகளிலும் அம்பு வில்லு மூலம் பலரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். சுவர்களில் அம்பு பாய்ந்த அடையாளங்களை தொலைக்காட்சிகள் வெளியிட்டிருக்கின்றன.காயமடைந்தவர்களை மீட்கும் பணியில்எட்டு அம்புலன்ஸ் வாகனங்களும் மூன்றுஅம்புலன்ஸ் ஹெலிக்கொப்ரர்களும்ஈடுபடுத்தப்பட்டன.
ஆட்கள் பாதுகாப்பாகஇருக்கின்றனரா என்பதை அறிவதற்கு காவல்துறையினர் வீடுகளது கதவுகளைத் தட்டி விசாரித்து வருகின்றனர் என்ற தகவலைநகர வாசி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நகரம் எங்கும் ஆயுதம் தரித்த காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.
பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg)இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.நோர்வேயில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உத்தோயா தீவில்(island of Utoya)நபர் ஒருவர் எழுபது பேரைக் கொன்ற படுகொலைக்குப் பிறகு நடந்திருக்கின்ற மோசமான தாக்குதலாக இந்தச் சம்பவம்கருதப்படுகிறது.
பொதுவாக ஸ்கன்டிநேவியன் நாடுகளில் காவல்துறையினர் துப்பாக்கியுடன் பணி புரிவதில்லை. நேற்றைய சம்பவத்தை அடுத்துசகல காவல்துறை பணியாளர்களும் ஆயுதம்வைத்திருக்க வேண்டும் என்று நோர்வே காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டிருக்கிறது.
———————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.14-10-2021