மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (15.10.21) பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“கொரோனா தொற்று நோய் முடிவடையும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பை துரிதப்படுத்துவது பற்றி நாங்கள் விவாதித்தோம். அதன்படி, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். அதற்காக கட்சியின் அனைத்து பிரிவுகளையும் வலுப்படுத்தும் திட்டம் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். மக்களின் பிரச்சினைகள், வறுமை நிலை வேகமாக அதிரித்துள்ளது. இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என நான் நம்பமாட்டேன். உரிய திட்டமிடல் மூலம்தான் இவற்றுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.