ஐக்கிய அமீரகத்தில் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பமான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (23) சூப்பர் 12 சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.
தகுதி சுற்றில் பங்களாதேஸ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, நமீபியா, ஓமான் மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் ஸ்கொட்லாந்து, பங்களாதேஸ், இலங்கை மற்றும் நமீபியா ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் நமீபியா அணி, முதன்முறையாக இருபதுக்கு20 உலகக் கிண்ணப்போட்டியில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
அந்தவகையில் இன்று ஆரம்பமாகவுள்ள சூப்பர் 12 சுற்றுக்கான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் 2வது போட்டியில் . இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடவுள்ளன.
அதேவேளை நாளை நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஸ், அணிகளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடவுள்ளன. நவம்பர் 14 வரை நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண 70 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது