Home இலங்கைநயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

by admin

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20 . 6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக நயினாதீவு பகுதியில்  மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கவில்லை என்றார்.


வங்காள விரிகுடாவின்  தென்பகுதியில்  ஏற்பட்டுள்ள  தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு  மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும், குறித்த காலப்பகுதியில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 


குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு60- 65 கிலோமீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுவதால்,  குறித்த காலப்பகுதியில் கடலானது கொந்தளிப்பாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கடற்தொழிலுக்கு செல்வோர்  குறித்த காலப்பகுதியில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  மேலும் குறித்த காலப்பகுதியில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More