டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏவை.4.2 (AY 4.2) வைரஸ் 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில்,
“ஏவை .4.2 வைரஸ் தொற்றின் வீரியம் குறித்து அறிய தொடர் ஆய்வக முடிவுகள் நடத்தப்படுகின்றன. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஏவை 4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டெறியப்பட்டுள்ளது. இதில் 93% தொற்று பிரித்தானியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருவான ஏனைய 20 வைரஸ்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரத்தில் 4% கொரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏவை .4.2 வைரஸ் பிரித்தானியாவில் கடந்த ஜூலை மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக பிரித்தானியாவில் அதிகரித்து, பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏவை.4.2 வைரஸ் குறித்து தீவிரமாக பிரித்தானிய மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது