இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உரையாற்றுவதற்கு டிரம்ப் உரையாற ஜோன் பெர்கவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்பை அண்மையில் சந்தித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே டிரம்லை பிரித்தானியாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஏற்ற டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து வருகை தர ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.
எனினும் ட்ரம்ப் பாராளுமன்றத்தில் பேச சபாநாயகர் ஜான்பெர்கவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைய டிரம்ப் தடை விதித்துள்ளதை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் இனவெறி மற்றும் பாலியல்வெறிக்கு தான் கடுமையான எதிர்ப்பாளன் எனவும் தெரிவித்த சபாநாயகர் பாராளுமன்ற கூட்டத்தில் ட்ரம்ப் பேச இருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.