Home இலங்கைவடக்கு – கிழக்கில் இரண்டு நாளைக்கு மழை நீடிக்கும்

வடக்கு – கிழக்கில் இரண்டு நாளைக்கு மழை நீடிக்கும்

by admin

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாகமுத்து பிரதீபராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும், குறித்த தாழமுக்கமானது தற்போது  சிலாபத்திற்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்தார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More