அரசாங்கம் தமது பங்காளிகளுடன் உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபடாத காரணத்தினாலேயே, அரசாங்கத்தின் பிரச்சினைகள் வெளியில் பேச வேண்டி இருந்ததாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய சட்ட அபிவிருத்தி அதிகார சபையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் 16 கட்சிகளின் கூட்டமைப்பாகும் என தெரிவித்த அமைச்சர், உள்ளக பேச்சுவார்த்தைகள் இல்லாத போது பிரச்சினைகள் நிரம்பி வழியும் எனவும் தெரிவித்தார்.
பதவிகளை பணயம் வைத்து தானும் தனது குழுவினரும் போராடி வருவதாகத் தெரிவித்த அவர், ‘இவர்களை விரட்டினால் அந்தப் பதவிகளைப் பெற்றுவிடலாம்’ என நினைத்தவர்களே தம்மை அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கோருவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.