Home இலங்கைசுழிபுரம் திக்கரை கிணற்றில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

சுழிபுரம் திக்கரை கிணற்றில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

by admin

சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவன் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு, சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீராடச் சென்றுள்ளார்.இந்தநிலையில் அவர் நீராடிக்கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மூளாய் வைத்தியசாலையில் இருந்து  யாழ். போதனா வைத்தியசாலைக்கு குறித்த இளைஞனை அழைத்துச் செல்லும்போது அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More