Home இலங்கைமன்னாரில் கடும் மழை-விடத்தல்தீவு கிராமத்தினுள் சென்ற கடல் நீர்

மன்னாரில் கடும் மழை-விடத்தல்தீவு கிராமத்தினுள் சென்ற கடல் நீர்

by admin


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளது. இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (7) காலை விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று நிலமையை அவதானித்ததோடு,பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார்.
மேலும் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியதோடு,உரிய கிராம அலுவலரை சந்தித்து பாதிப்பு தொடர்பாக அறிந்து கொண்டார்.


Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More