Home இலங்கையாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகள் நாளை இடம்பெறும்

by admin

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை இடம்பெறும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் மூன்று மாவட்டங்களிலும் காலநிலை சீராகி வருவதாக மாவட்டச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.அதனால் மீள ஆரம்பிக்கப்பட்ட தரங்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை இடம்பெறும்” என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More