சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்தே இவ்வாறு அவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் தேடி வந்துள்ளனர். காணாமல் போனமை தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் உயரப்புலம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்



