உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா முதல்முறையாக சம்பியன்’ கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாார். முதல்தர வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன் போட்டி ‘ மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடைபெற்றது.
.இதில் இறுதிப்போட்டியில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் முதல்த வீராங்கனையுயான முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டு 1 மணி 38 நிமிடம் விளையாடி 6-3, 7-5 என்ற நேர்செட்டில் வென்று சம்பியன் கிண்ணத்தை கைபஹபற்றினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளார். அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
.2-வது இடத்தை கோன்டாவெய்ட் பெற்றுள்ளாா். . வெற்றிக்கு பிறகு 28 வயதான முகுருஜா கூறுகையில் ‘என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்’ எனத் தொிவித்துள்ளாா்.
இதன் இரட்டையர் பிரிவவின் இறுதிசுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-காத்ரினா சினியகோவா இணை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சூ வெய்ஸ் சீக் (சீன தைபே)-எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஜோடியை வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.