அமெரிக்காவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவி ல் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் எஸ்யுவி கார் ஒன்று புகுந்து தாறுமாறாக ஓடியதில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
விஸ்கான்ஸின் மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான மில்வூகீயில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
உடனடியாக உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் காயமடைந்தவர்களில் 11 பேர் பெரியவர்கள் என்பதுடன் 12 பேர் குழந்தைகள் என அப்பகுதி காவல்துறை தலைவர் தொிவித்துள்ளாா்.
. சம்பவத்தின் போது அந்த குறிப்பிட்ட வாகனத்தை நோக்கி அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு காரை நிறுத்தச் செய்ததாகவும் இந்த சம்பவத்தால்,இன்று திங்கள்கிழமை பாடசாலைகள் திறக்கப்படாது என்பதுடன் வீதிகள் சாலைகள் மூடப்பட்டிருக்கும். எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் காரை ஓட்டிவந்தவரை கைது செய்து விசாாித்து வருவதாகவும் தொிவித்த அவா் இப்போதைக்கு விஸ்கான்ஸின் மில்வூகீ பகுதிக்கு வேறு ஏதும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் தொிவித்துள்ளாா்.
இது ஒரு பயங்கவாதச் செயலா என்ற கோணத்தில் காவல்துறையிர் மற்றும் உளவுப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.