ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் குளிர் காலத்தின் முடிவில் மரணத்தைச்சந்திக்க நேரிடும் என்ற சாரப்பட ஒர் எச்சரிக்கையை நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) வெளியிட்டிருக்கிறார்.
தடுப்பூசி ஏற்றியோர் மற்றும் தொற்றுக்குஇலக்காகிக் குணமடைந்தோர் தவிர ஏனையவர்கள் மிக மோசமான டெல்ரா வைரஸிடம் இருந்து பாதுகாப்புப்பெறுவது கடினம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஜேர்மனி சமீப நாட்களாக கொரோனா வைரஸின் நான்காவது அலையின் பிடியில் உள்ளது. தொற்றாளர் எண்ணிக்கைமிக வேகமாக உயர்ந்து வருகிறது. நாட்டின் பல மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைவான எண்ணிக்கையாக 68 வீதமானவர்களே அங்கு முற்றாகத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
பேர்ளினில் செய்தியாளர் மாநாட்டில்பேசிய சுகாதார அமைச்சர் தடுப்பூசி ஏற்றுவதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும்வகையில் எச்சரிக்கை வெளியிட்டார்.வேகமாகப் பரவி புதிய அலையைத் தோற்று
வித்துள்ள டெல்ரா வைரஸ்தடுப்பூசி ஏற்றாதோருக்கு உயிராபத்தைஉண்டாக்கும் என்று அவர் எச்சரித்தார்.அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி ஏற்றாதோர் டெல்ராவின் தொற்றுக்கு இலக்காகுவதற்கான சாத்தியங்கள்மிக மிக அதிகம் என்றும் அவர் கூறினார்”தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதை நான்எதிர்க்கிறேன்.
ஆனால் ஊசி போட்டுக்கொள்வது ஒருவரது தார்மீகக் கடமைஆகும்.சுதந்திரம் என்பது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும். தடுப்பூசி ஏற்றுவது சமூகத்துக்குச் செய்கின்ற தார்மீகக் கடமைஆகும்” – என்றும் அவர் தெரிவித்தார்.அடுத்த சில மாதங்களுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால் சுமார் 16 மில்லியன்” டோஸ் “மொடோனா” (Moderna) தடுப்பூசிமருந்து பாவனைக்கு உதவாது போகின்றநிலைமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.23-11-2021