Home இலங்கைமாலம்பே தனியார் பல்கலைக்கழகம் குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் – இலங்கை மருத்துவ பேரவை

மாலம்பே தனியார் பல்கலைக்கழகம் குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் – இலங்கை மருத்துவ பேரவை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என இலங்கை மருத்துவ பேரவை அறிவித்துள்ளது. எதிர்வரும் 17ம் திகதி இலங்கை மருத்துவ பேரவை கூட உள்ளதாகவும் இதன் போது, மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து நேற்றைய தினம் இலங்கை மருத்துவ பேரவை உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More