Home இலங்கைமன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

by admin


மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் கடும் கெடுபிடிகள் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணி அளவில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


இன்று (27) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த பட்டுருந்த நிலையில் தமிழர் தேசிய  வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இடம் பெற்றது. 


இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,,மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More