மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமது வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்து 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கிராமம் பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 நபர்களும், சௌத்பார் பகுதியில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 நபர்களும், எழுத்தூர் கிராமத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40 நபர்களும், எமில் நகர் பகுதியில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 183 நபர்களும்,பேசாலை மேற்கு பகுதியில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 45 நபர்களும், பேசாலை தெற்கு பகுதியில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 123 நபர்களும்,தலை மன்னார் ஸ்ரேஸன் பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 130 நபர்களும்,துள்ளுக்குடியிறுப்பு பகுதியில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 220 நபர்களும், ஓலைத் தொடுவாய் பகுதியில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 118 நபர்களும், தோட்டவெளி பகுதியில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 123 நபர்களும்,பெரிய கரிசல் பகுதியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 15 நபர்களும்,சிறுத்தோப்பு பகுதியில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 113 நபர்களும் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 நபர்கள் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மாவட்டச் செயலகம் ஊடாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.