சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் , வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தா. சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, விசேட தேவையுடையோர் மத்தியில் , அவர்களை உற்சாகமூட்டும் வகையில் சிறப்பு உரையாற்றினார்.
அதேவேளை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த , மருத்துவ நிபுணர்களான திரு.M.தவராசா முகம் தாடை அண்ணப் பிளவு சத்திரசிகிச்சை நிபுணர், மருத்துவர்.திரு.சிவபாதமூர்த்தி திட்டமிடல் வைத்திய அதிகாரி அவர்களும் சிறப்பு தேவையுடையவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் மருத்துவ ரீதியான பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களுக்கான விசேட மருத்துவமுகாம்களை எதிர்வரும் வாரங்களில் நடாத்தும்படி ஆலோசனை வழங்கினார்கள்.
அதற்கு துறைசார் மருத்துவ நிபுணர்களை அனுப்பி உதவுவதாக தெரிவித்தார்கள்.
அத்துடன் புலர் அமைப்புக்கு வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட நுளம்பு வலை, போர்வை மற்றும் துவாய் என்பவையும் வழங்கி வைக்கப்பட்டது.