Home இலங்கைமன்னார் சாந்திபுரம் பகுதியில் எாிவாயு அடுப்பு வெடிப்பு

மன்னார் சாந்திபுரம் பகுதியில் எாிவாயு அடுப்பு வெடிப்பு

by admin

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை(04) இரவு 10 மணி அளவில் எாிவாயு அடுப்பு தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையில் திடீரென அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்திய மையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் உரிய  வீட்டார் தெரிவித்துள்ளனர்


அதே நேரம் தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ ,ரெகுலேட்டர்களிலோ, வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்தது டன் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More