ஆபிரிக்க நாடான புருண்டியில் உள்ள கிடேகா (Gitega) பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற இந்த தீ விபத்தில் குறைந்தது 69 கைதிகளுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 34 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
சுமார் 400 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில் சுமார் 1,500-க்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பியர் நுகுருஞ்ஜிசாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்காலம் என சந்தேகிக்கப்படுகினற் போதிலும் விபத்து குறித்து விரிவான விசாரணைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் துணை ஜனாதிபதி புரோஸ்பர் பஸோம்பன்சா தெரிவித்துள்ளார்