Home இலங்கையாழ்.பொது நூலகத்தில் “இந்தியன் சென்ரரை” பார்வையிட்ட சீன தூதுவர்!

யாழ்.பொது நூலகத்தில் “இந்தியன் சென்ரரை” பார்வையிட்ட சீன தூதுவர்!

by admin

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் , யாழ்.பொது நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். 

அதன் போது , அங்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியும் இருந்தார். அத்துடன் நூலகத்திற்கு உதவிகளையும் வழங்கியுள்ளார். 

அதேவேளை யாழ்.பொது நூலகத்தினுள் உள்ள ” இந்தியன் சென்ரர்” பகுதியையும் சீன தூதுவர் பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More