‘தப்லிகி ஜமாத் அமைப்புக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்’ என, மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தப்லிகி ஜமாத் அமைப்பு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தப்லிகி ஜமாத் அமைப்பு இன்று 150 நாடுகளில் பரவியுள்ளது. இந்த அமைப்பு இந்தியா, பாகித்தான், வங்காளம் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது.
“தப்லீக் ஜமாத்” என்பதற்கு “நம்பிக்கையை வலுப்படுத்த வந்த சமுதாயம்” என்று பொருள் காணப்படுகிறது.
ஏற்கனவே இஸ்லாமியக் கருத்துகளை, நெறிகளை அச்சமூக மக்களுக்குப் பரப்பி வரும் தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு திடீரெனத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தீவிரவாதத்தின் வாயில்களில் ஒன்று என சவுதி அரேபிய அரசு தப்லீக் ஜமாத் அமைப்பைக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்த சவுதி