யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சிவில் உடையில் வந்த நபர்கள் தங்களை பாதுகாப்பு தரப்பினர் என அடையாளப்படுத்தி மீனவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மீனவர் கடற்றொழிலுக்கு சென்றவேளை கடலில் இந்திய இழுவை படகுகளால் 17 வலைகளை இழந்திருக்கின்றார். அவற்றை தேடியும் கிடைக்காத நிலையில் சில மணிநேரம் காலதாமதமாக பிறபகல் 2:45 மணியளவில் கரைக்கு திரும்பியிருக்கின்றார். கரைக்கு திரும்பியவர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை இராணுவ புலானாய்வு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணை செய்துவட்டு சென்றிருக்கின்றனர்.
மீண்டும் நேற்று காலை (21.12.21) 11:00 மணியளவில் விசாரணைக்கு வருமாறு குறித்த மீனவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த 34 வயதுடைய ஞானப்பிரகாசம் ராஜ்குமார் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான மீனவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.