Home இலங்கைஇணைப்பு2 -லண்டனில் இருந்து கிளிநொச்சி திரும்பி காணாமல் போனவா் சடலமாக மீட்பு

இணைப்பு2 -லண்டனில் இருந்து கிளிநொச்சி திரும்பி காணாமல் போனவா் சடலமாக மீட்பு

by admin

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த 67 வயதுடைய இராசேந்திரம் இராசலட்சுமி என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக நேற்று (27) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவாிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு குறித்த சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகநபர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர்.

லண்டனில் இருந்து கிளிநொச்சி திரும்பிய இராசலட்சுமியை காணவில்லை!


December 28, 2021 6:21 am

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தங்கியிருந்த வயோதிப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் தனது மகனுடன் வசித்து வந்த 67 வயதுடைய இராசேந்திரம் இராசலட்சுமி என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர், பூநகரி – தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர், 3 வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக, அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில், நேற்றயை தினம் (27.12.21), வங்கிக்கு சென்று திரும்பியுள்ளார். பிற்பகல் 3 மணி முதல் 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

இந்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம், நேற்று இரவு 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. அவர் தங்கியிருந்த வீட்டின் உள்ளே, இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More