இலங்கை கிாிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீளப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கிய பதவிவிலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு இருபது போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய 30 வயதான பானுக்க இலங்கை அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 18 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது