டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச்சின் வீசாவை அவுஸ்திரேலிய அரசு 2 ஆவது முறையாக ரத்து செய்துள்ளது. போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என தொிவித்தே இவ்வாறு வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஆதாரத்தை வழங்காமையினைக் காரணம் காட்டி ஜோகோவிச்சின் விசாவினை அவுஸ்திரேலிய ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என தொிவித்ததனையடுத்து அவரது விசா ரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறு வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது.