Home இலங்கைஇரண்டு பாறைகளுக்கு இடையில் சடலம் – காவற்துறை மீட்டது!

இரண்டு பாறைகளுக்கு இடையில் சடலம் – காவற்துறை மீட்டது!

by admin

கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.​

பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 45 வயதான ஆணொருவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More