மக்களின் வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்வடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடுவதற்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்கள் தற்போது செயழிந்து காணப்படுவதாகவும் இதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தபபடாத காரணத்தினால் நிதி, வாகனங்கள் என்பன வேறு வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், எனவே நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை நடத்தி அரசாங்கத்தை உள்ளுராட்சி மன்றத் தேர்தலர் நடத்துமாறு வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.