151
திடீர் சுகயீனம் காரணமான 4 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த ரஸ்மிகா (வயது4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் காலை சிறுமிக்கு திடீர் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love