Home இலங்கைகறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்யவில்லை என்கிறது அரசாங்கம்

கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்யவில்லை என்கிறது அரசாங்கம்

by admin

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார் என, நேற்று (31) வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் பேசியதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, குறித்த செய்தியில் தொிவிக்கப்பட்ட கருத்துக்களை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல கொள்வனவுகள் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளியிட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More