யாழ்.பல்கலை கழக இரு மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர். அதில் காயமடைந்த மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினா்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.