குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதாக துருக்கி ஜனாதிபதி அறிவிப்பு
அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதாக துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan தெரிவித்துள்ளார். தம்மை அவதூறு செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக்கௌர்வதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சி முயற்சியின் போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நெருக்கடி நிலைமைகளின் போது ஐரோப்பிய ஒன்றியமோ மேற்குலக நாடுகளோ கரிசனை காட்டவில்லை எனவும், கவலையடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். துருக்கியின் ஜனநாயக நிலைமைகள் குறித்து எவரும் கரிசனைகாட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.